உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பை கொட்டி எரிப்பதால் மாசு

குப்பை கொட்டி எரிப்பதால் மாசு

வாடிப்பட்டி, : சமயநல்லுார் ஊராட்சியில் தினமும் சேகரிக்கும் குப்பையை தேனுார் ரோட்டோரத்தில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் இப்பகுதி 24 மணி நேரமும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனம் தெரிவதில்லை. பலத்த காற்று வீசும் போது புகை சாலையை மறைக்கிறது. துர்நாற்றம் வீசி காற்று மாசுபடுகிறது. குப்பை கிடங்கு அருகே செல்லும் ரயிலுக்கான மின் கம்பிகளால் விபத்து அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும். குப்பை கொட்டுவதை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் தகர தடுப்புகளால் அடைக்கப்பட்டது. காலப்போக்கில் அவை காணாமல் போனது. ஊராட்சி மட்டுமின்றி தனியார் வாகனங்களில் வந்தும் இங்கு குப்பையை கொட்டுகின்றனர். அவற்றை அகற்ற ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை