உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தலைமைச் செயலக வளாகம் மதுரையில் அமைக்க ஆதரவு; சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்

தலைமைச் செயலக வளாகம் மதுரையில் அமைக்க ஆதரவு; சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்

மதுரை : ''மதுரையில் தலைமைச் செயலகம் போன்ற ஒரு அமைப்பை அமைக்க வேண்டும்,'' என மதுரையில், முன்னாள் பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.அவர் கூறியதாவது:தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என்று கூறியது மக்களிடம் உடனடியாக வரவேற்பை பெற முடியாது. அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பு பெறலாம். எங்களைப் பொறுத்தவரை கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும். ஆனால் அந்த மனநிலையில் தி.மு.க., அரசு இல்லை.பிற கட்சிகளும் அந்த மனநிலையில் உள்ளனவா எனத்தெரியாது. நாங்கள் இதை எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். மத்திய அரசிலும் நடைமுறைப்படுத்துகிறோம். விஜய் இந்த வார்த்தையை சொல்லும் முன் அதை ஏற்று யார் வருவார் என்பதைத் தெரிந்து தான் சொல்லி இருப்பார் எனக் கருதுகிறேன்.அவர் தலைமைச் செயலகத்திற்கு இணையான ஒரு அமைப்பை மதுரையில் அமைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். மதுரை தமிழின் தலைநகரம். அன்னை மீனாட்சி ஆளும்பூமி. அதற்கு உயிர் கொடுக்கும் கடமை அனைத்து தமிழறிஞர்களுக்கும் இருக்கிறது. மீனாட்சி தந்த தமிழை வைத்துதான் தி.மு.க.,வினர் அரசியல், பிழைப்பு நடத்துகிறீர்கள். அப்படி இருக்கும்போது அதை அவர்கள் ஏன் செய்யவில்லை. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். அதை கேட்கும் உரிமை உள்ளதென கருதினால், மதுரையில் ஏன் சட்டசபை வளாகத்தை அமைக்கக் கூடாது. வரக்கூடிய தேர்தல் மதுரையை மையமாக வைத்து தமிழின் தலைநகரில் தமிழக சட்டசபையின் துணை அலுவலகம் செயல்படும் வகையில் நாங்கள் குரல்கொடுப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ