உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொன்னாகுளம் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

பொன்னாகுளம் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

மதுரை : அலங்காநல்லுார் ஒன்றியம் வெள்ளையம்பட்டி முத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கு: வெள்ளையம்பட்டியில் சர்வே எண் 272ல் பொன்னாகுளம் நீர்நிலை உள்ளது. இந்த நீர்நிலை பகுதி தனியார் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ஜெயவசந்தன் ஆஜரானார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு : குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள ஆக்கிரமிப்பு குறித்து வாடிபட்டி தாசில்தார் சர்வே செய்ய வேண்டும். அதற்கு முன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். சர்வே முடிவில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் 4 மாத காலத்திற்குள் அகற்ற வேண்டும். நீர்நிலை அதன் பழையநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி