உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் தேரோடும் வீதிகளில் பூமிக்குள் மின் கம்பி பதிக்க பூஜை

குன்றத்தில் தேரோடும் வீதிகளில் பூமிக்குள் மின் கம்பி பதிக்க பூஜை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோடும் ரத வீதிகள், கிரிவல ரோடு பகுதிகளில் மின்வாரியம் சார்பில் ரூ. 1.98 கோடியில் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.தேரோடும் வீதிகளின் மேல் பகுதியில் வீடுகள், வணிக வளாகங்களுக்கான மின் ஒயர்கள் குறுக்காக உள்ளன. தேரோட்டத்தின்போது அந்த ஒயர்களை துண்டித்துவிட்டு, தேரோட்டம் முடிந்த பின்பு மீண்டும் இணைப்பு கொடுத்து வருகின்றனர். இப்பகுதி மின் ஒயர்களை பூமிக்கு அடியில் பதிப்பதற்காக பூமி பூஜையுடன் பணிகள் நேற்று துவங்கின. 1.634 கி.மீ. உயர் அழுத்த மின்பாதை புதை வட பாதையாகவும், 5.998 கி.மீ. தாழ்வழுத்த மின்பாதை புதைவட பாதையாகவும் மாற்றப்பட உள்ளது. 4 மாதத்தில் பணிகள் நிறைவடையும்.பூமி பூஜையில் மின்வாரிய தலைமை பொறியாளர் உமாதேவி, மேற்பார்வை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்கள் லதா, நிலமதி, பாலபரமேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சண்முகநாத பூபதி, உமா மகேஸ்வரி, உதவி பொறியாளர் சுமங்களாதேவி, கோயில் துணை கமிஷனர் சுரேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !