உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் மின்தடை அவதி

பேரையூரில் மின்தடை அவதி

பேரையூர்: பேரையூர் பகுதியில் ஒரு வாரமாக கடும் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும் உற்பத்தியாளர்கள், சேவைத் தொழிலில் உள்ளவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை, மாலையில் ஏற்படும் மின்தடையால் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். இரவில் மின் விசிறி இயக்க முடியாததால் கொசுக்கடி தாங்க முடியாமல் முதியோர், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். ஊராட்சிகளிலும், விவசாய கிணறுகளில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் சீரான மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி