உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிலம்ப போட்டி: மதுரைக்கு பரிசு

சிலம்ப போட்டி: மதுரைக்கு பரிசு

திருப்பரங்குன்றம்: கன்னியாகுமரியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மதுரை சிலம்ப வீரர்கள் பதக்கங்களை வென்றனர். அப்போட்டிகளில் பங்கேற்ற மதுரை கே.கே.கே. உலக சிலம்பம் கூட்டமைப்பு வீரர்களில் 3 வயது பிரிவில் லித்தேஸ்வரன் முதல் பரிசு, 10 வயது பிரிவில் தஸ்வின் முதல் பரிசு, 7 வயது பிரிவில் ஜெய்க்ருஷ் 2ம் பரிசு, ஆறு வயது பிரிவில் அல்யாஷித்தா 2ம் பரிசு வென்றனர். பரிசு பெற்ற வீரர்களை கே.கே.கே. உலக சிலம்பம் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் கார்த்திக், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி