உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாய்மைப் பணியில் தொழில் வர்த்தக சங்கம்

துாய்மைப் பணியில் தொழில் வர்த்தக சங்கம்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனை துாய்மையாக வைத்துக் கொள்ள தொழில் வர்த்தக சங்கம் சார்பில் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் துாய்மைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பங்கு கொள்ளும் வகையில் மட்கும் மட்கா குப்பைகளுக்கென 20 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் சங்கம் சார்பில் நிர்வாகத்திடம் நேற்று வழங்கப்பட்டன. மதுரை ரயில்வே பகுதி வர்த்தக இன்ஸ்பெக்டர் இளநி மணிகண்டனிடம் சங்கச் செயலாளர் ஸ்ரீதர், உதவித் தலைவர் செல்வம், உதவிச் செயலாளர்கள் செந்தில், கணேசன் ஆகியோர் வழங்கினர். ஸ்டேஷன் சுகாதார இன்ஸ்பெக்டர் சுந்தரராமன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி