ரூ.1௦ கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்
மதுரை : மதுரை மாநகராட்சி முதல் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 19 திட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். மிளகரணை, பட்டிமேடு ரோடு, சாஸ்தா நகரில் தலா ரூ.8.50 லட்சத்தில் ரேஷன் கடை கட்டடம், கூடல்புதுாரில் ரூ.13.80 லட்சம், ஆனையூரில் ரூ.12.50 லட்சத்தில் குழந்தைகள் வளர்ச்சி மையம் உட்பட பல்வேறு கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., அன்பழகன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சுவிதா, உதவி கமிஷனர்கள் மணியன், பார்த்தசாரதி, பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.