உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

புதிய கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளித்துவந்த நிலையில், இன்று (ஜூலை 10) முதல் அது நிறுத்தப்பட்டு புதிய கட்டண விதிப்பு நடைமுறை அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் இதுவரை உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இந்த கட்டண விலக்கு நிறுத்தப்பட்டு மாதம்தோறும் ரூ.340 கட்டணம் இன்று முதல் அமலாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.புதிய கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக.,வினர் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலையை மறித்து வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், ஆர்டிஓ உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் ஆகாத நிலையில், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அந்த போலீஸ் வாகனத்தை அங்கிருந்து எடுத்து செல்லவிடாமல் பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Rpalnivelu
ஜூலை 11, 2024 06:20

இதெல்லாம் சாராய வியாபாரி டி ர் பாலு மத்திய அமைச்சராக இருந்த போது செய்த அட்டூழியம். தனியார் சுங்கச் சாவடி கான்ட்ராக்டர்களிடம் ஏகப்பட்ட கோடிகைகளை கறந்து விதிகளை தாறுமாறாக போட்டு மத்திய அரசாங்கத்தின் கைகளை கட்டிப் போட்டார். அதனால்தான் அப்போதைய பிரதமர் இவரை அமைச்சரவையில் சேர்க்கவேயில்லை.


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜூலை 10, 2024 19:40

இப்போது விளம்பரத்துக்காக போராட்டம் பண்ணும் எடப்பாடியின் எடுபிடியான உதயகுமார் அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த போது இந்த சுங்கச் சாவடியை நீக்காமல் அல்லது திருமங்கலத்தை விட்டு தள்ளி வேறு இடத்தில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யாமல் எங்கே போனார்? இதெல்லாம் அதிமுகவின் அப்பட்டமான அரசியலே தவிர மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை இவர்களின் இன்றைய போராட்டத்தால் அந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் தனியார் வாகனங்களும் வேறு வேறு மாற்று பாதையில் சுற்றி விடப்பட்டு மக்கள் வேதனையை அனுபவித்ததுதான் மிச்சம்!


பக்கிரிபாபு
ஜூலை 10, 2024 19:35

இது ஒன்றிய அரசின் கைங்கரியம்.மறுபடியும் உருவ ஆரம்பிச்சுட்டாங்க.


J.Isaac
ஜூலை 10, 2024 17:01

இந்தியாவில் இதே ஆட்சி நீடித்தால்,அடுத்து தெருக்களில் நடந்தாலே வரி வசூல் பண்ணும் காலம் வரலாம். மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி ஆளும் அரசு வஞ்சிக்கிறது.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 10, 2024 15:36

ஒரு நல்ல அரசுக்கு அழகு இலவச சாலை கல், மருத்துவம், கல்வி . அனால் இந்தியாவில் நடப்பதே வேறு .எங்கு போனாலும் கட்டண கொள்ளை . டூ வீலர் நிறுத்தும் இடத்தில 12 மணி நேரத்திற்கு 15 ரூபாய் . பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிடடம் பழுதடைந்து உள்ளது. கட்டண கழிப்பிடத்தில் ரசித்து இல்லாமல் கொள்ளை. சுங்க சாவடிகள் நீக்கப்ப் படவேண்டும்


hindustani
ஜூலை 10, 2024 15:25

நீட்டுக்காக போராடும் ஆளும் கட்சி.சுங்கச்சாவடி இழுத்து மூட போராட வேண்டும். ஏனென்றால் மக்கள் ஏற்கனவே சாலை வரி செலுத்தி வருகின்றனர். இது அனைத்து சமுதாய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், மற்றும் பணமும் மிச்சமாகும். குறைந்தபட்சம் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் தமிழக அரசு மூடலாம். சுங்கச்சாவடி இல்லாத மாநிலமாக மாற்றலாம்.


N Annamalai
ஜூலை 10, 2024 15:01

மூன்றாவது முறை ஆட்சி இன்னும் மூன்று மடங்கு கட்டணம் அதிகரிக்கப்படும் .வண்டியை சாவடி முன் நிறுத்திவிட்டு நடந்து போகவேண்டும் ,இல்லை கிராமங்கள் வழியாக செல்ல வேண்டும் .அங்கு தேநீர்கடைகள் வியாபாரம் கூடும்


GMM
ஜூலை 10, 2024 14:39

தேசிய நெடுஞ்சாலை பாராளுமன்ற சட்ட விதி முறைகளை பின் பற்றி செயல்படும் அமைப்பு. இதற்கான முதலீடு இலவச மருத்துவம், கல்வி போன்று மக்கள் வரி பணம் மூலம் கிடையாது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் எல்லா உரிமை உண்டு. ஆனால், வரி கட்டாயம் இல்லை. பராமரிக்க, மக்கள் பணத்திற்கு வட்டி, அசல் கொடுக்க சுங்கம் கட்டாயம் வசூலிக்க வேண்டும். தேசிய சாலை வழி செல்லாமல் மாநில நெடுஞ்சாலை வழி சென்றால், சுங்கம் இருக்காது? அண்ணா திமுகவினர் சொத்துக்களை கொடுத்தால், சுங்க வரி விலக்கு அளிக்க முடியும். மக்கள் ஓட்டும் போட முன்வருவர்.


Tirunelveliகாரன்
ஜூலை 10, 2024 14:12

வாஜ்பாய் பிஜேபி அரசின் பெருமை மிகு திட்டம். நம் பணத்தை புடிங்கி கார்ப்பரேட் கையில் கொடுப்பது பிஜேபி ரசின் தலையாய கடமைகளில் ஓன்று


R Kay
ஜூலை 10, 2024 13:54

சாலைகளின் தரம் படு கேவலமாக உள்ளது. அதை மேம்படுத்தவும் முதலில்


புதிய வீடியோ