உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது. கொண்டையம்பட்டி ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு மூன்று ஆண்டுகளாகியும் வழங்காததை கண்டித்து கடந்தாண்டு டிச.30ல் போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்தில் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். ஏழு மாதங்கள் கடந்தும் வழங்காததை கண்டித்து, தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டும், மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளை கண்டித்தும் உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் பார்த்திபன், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி 2 மாதங்களில் பட்டா வழங்கப்படும் என கூறியதால் கலைந்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன், ஒன்றிய நிர்வாகிகள் தவமணி, ஞானவேல், மணல் பாண்டி, தனம், தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !