உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து மதுரையில் போராட்டம்

மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து மதுரையில் போராட்டம்

மதுரை: விவசாய கடன் தள்ளுபடி தொகையை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பாக போராட்டம் நடந்தது. மதுரை மாவட்ட கவுரவ செயலாளர் ஆசிரிய தேவன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜா, மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.மதுரை, தேனி மாவட்ட செயலாளர்கள் பாரூக்அலி, காமராஜ் பாணடியன் கூறியதாவது:விவசாய கடன் தள்ளுபடி தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி அத்தொகையைதொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை. விவசாய கடன் மற்றும் மகளிர் குழு கடன் வழங்குவதில் காலம் தாழ்த்துவதை கை விட வேண்டும். தொடக்க நிலை சங்கங்கள் பெறும் கடன்களுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை கண்டித்து நவ. 11 காலை போராட்டம், 18 ல் கண்டன ஆர்ப்பாட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை