உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது.

திருமங்கலம்: தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டி லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் நவ.,3ல் ஏலக்காய் மூடைகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து ஏலக்காய் மூடைகள் சேதமடைந்ததாக வாலாந்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்நிலையில் செக்கானுாரணி போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக வந்த பாலகிருஷ்ணன் நவ.,14ல் கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் முத்து, போலீசார் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது. நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்டோர் செக்கானுாரணி போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாலகிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை