உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பி.எஸ்.என்.எல்., தொலைபேசி வாடிக்கையாளர்கள் பாதிப்பு

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி வாடிக்கையாளர்கள் பாதிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., எக்ஸ்சேஞ்ச், டவர்களில் யு.பி.எஸ்., இல்லாததால் மின்சாரம் துண்டிக்கப்படும் போது அலைபேசிகளில் 'சிக்னல்' கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்.எக்ஸ்சேஞ்ச்களில் இருந்த ஜெனரேட்டர்களும் பழுதானதால் மின்சாரம் எப்போது வருமோ அப்போதுதான் தரைவழி போன் மற்றும் இணையசேவை கிடைக்கிறது. எனவே இங்குள்ள அரசு அலுவலகங்களில் போன் மற்றும் இணையதளப் பிரச்னை அதிகமாக உள்ளது. இதனால் வங்கிகளிலும் பணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.தினமும் இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட முறை மின்சாரம் தடைபடுவதால் அப்போதெல்லாம் இணைய வழி சேவை, அலைபேசி 'சிக்னல்' கிடைப்பதில்லை. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மாதம் ஒருமுறை பராமரிப்புக்கான மின்தடை நேரத்திலும் இணையசேவை நாள் முழுவதும் வேலை செய்வதில்லை. அதிகாரிகள் யு.பி.எஸ்., நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை