உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தோட்டத்தில் மலைப்பாம்பு

 தோட்டத்தில் மலைப்பாம்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மானுாத்து பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகதீஷ். இவரது தோட்டத்தில் கோழிகள் அடிக்கடி காணாமல் போயின. தோட்டத்தை கண்காணித்த போது 15 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை பார்த்தார். சிவாலயம் வன உயிரின பாதுகாப்பு தன்னார்வல குழுவின் தனுஷ் தலைமையிலான இளைஞர்கள் முட்செடிகளுக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பை 2 மணிநேரம் போராடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ