உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குவாரி விதிமீறல் வழக்கு

குவாரி விதிமீறல் வழக்கு

மதுரை: கள்ளிக்குடி அருகே மொச்சிகுளம் சிவசக்தி பாலன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திருமால் கிராமத்தில் கல்குவாரி செயல்படுகிறது. அனுமதித்த அளவைவிட விதிகளை மீறி அதிக ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. அருகிலுள்ள நீர்நிலை, விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. உரிமத்தை ரத்து செய்ய கலெக்டரிடம் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை கலெக்டர் பரிசீலித்து 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ