மழையால் அழுகிய உளுந்து பயிர்கள்
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. சாகுபடிக்கு 70 முதல் 80 நாட்கள் தேவை. 60 நாளில் இருந்து அறுவடை செய்யலாம். ஆண்டுதோறும் இப்பயிர்களை அறுவடை செய்யும் போது வீட்டு பயன்பாட்டிற்கு வைத்துக்கொண்டு, மீதமுள்ள உளுந்தை விவசாயிகள் விற்பனை செய்வர். கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் உளுந்து பயிர்கள், ஈரத்தால்பாதிக்கப்பட்டு முற்றிலுமாக அழுகிவிட்டன. மகசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கு கூட இந்தாண்டு உளுந்து கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.