உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் பெய்த மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இத்தாலுகாவில் வாடிப்பட்டி, அலங்காநல்லுார், சோழவந்தான் பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளது. இந்த வயல்களில் கிடை அமர்த்த, மேய்ச்சலுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள், ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.கால்நடைகளுக்கு வயல்களில் காய்ந்த வைக்கோல், தட்டை, வாய்க்கால் வரப்புகளில் வறட்சியான புற்கள் தீவனமாக பயன்பட்டன. இந்நிலையில் சமீபத்திய மழையால் வயல்கள், வரப்புகளில் புல், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு அதிகளவில் பசுந்தீவனங்கள் கிடைத்துள்ளது. விலையின்றி பசுந்தீவனம் கிடைத்ததால் கால்நடை வளர்ப்போர் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை