உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைக்கு சாய்ந்த நெற் பயிர்

மழைக்கு சாய்ந்த நெற் பயிர்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் பரவலாக பெய்த மழையால் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதி கால்வாய்களில் தண்ணீர் திறப்பதற்கு முன் கிணறு, போர்வெல் நீரைக் கொண்டு விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். இவை கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராக உள்ளது. சில நாட்களாக பெய்து வரும் மழையால் பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன. அறுவடை செய்ய வேண்டிய காலகட்டத்தில் நெல்மணிகள் மண்ணில் சாய்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பு குறித்து வேளாண், வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து அரசுக்கு உரிய இழப்பீடு வழங்க பரிந்துரைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை