மேலும் செய்திகள்
வினாடி-வினா போட்டி: மாணவர்கள் கலக்கல்
30-Oct-2025
மதுரை: தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் மேலுார் இயக்கம் சார்பில் மாநில அளவிலான ராஜ்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யும் மூன்று நாட்கள் பயிற்சி முகாம் மாயாண்டிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமில் 354 சாரண சாரணிய மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அடிப்படை திறமைகள் குறித்து பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு அதிகாரிகளாக சண்முக நாச்சியார், நாராயணன், ராஜசேகர், சிவக்குமார் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் திவ்யநாதன் வரவேற்றார். மாநில அமைப்பு ஆணையர் ஜெயசேகர், பயிற்சி ஆணையர் செல்லமணி கண்காணித்தனர். ஏற்பாடுகளை இயக்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஏற்பாடு செய்தார்.
30-Oct-2025