ரோட்டில் கிடந்த ரேஷன் அரிசி
திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் தர்மர் நகர் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு 4 ரேஷன் அரிசி மூடைகள் கிடந்தன. வட்ட வழங்க அலுவலர் அய்யம்மாள், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.இந்த மூடைகள் யாருடையது, இங்கு எப்படி வந்தன என விசாரணை நடக்கிறது.