மேலும் செய்திகள்
பத்திரப்பதிவு 'சர்வர்' முடக்கம்
30-Sep-2025
மதுரை : மதுரை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு நேற்று முன்தினம் சென்றவர்களுக்கு பாயின்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை சரிவர பதிவாக வில்லை என்ற புகார் எழுந்தது. பொருட்கள் வினியோகத்தில் தடை ஏற்பட்டது. பல கடைகளில் பொருட்களை வாங்க வந்தவர்கள் கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து விசாரித்ததில் நேற்று முன்தினம் அனைத்து கருவிகளுக்குமான 'சர்வர்' சரிவர வேலை செய்யாததால் பொருட்களை எடைபோட்டு வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சரியானதால் ஒருநாளில் 20 முதல் 30 பேருக்கு பொருட்களை வழங்கினர். நேற்றும் இப்பிரச்னை தொடர்ந்ததால் யாருக்கும் பொருள் வினியோகிக்க முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட வினியோக அலுவலர் முத்துமுருகேச பாண்டியன் கூறுகையில், ''சர்வர் பிரச்னை ஏற்பட்டு வினியோகம் பாதித்தது உண்மைதான். இன்று (நேற்று) மதியம் சரியாகிவிட்டதால் அதன்பின் பாதிப்பில்லை'' என்றார்.
30-Sep-2025