| ADDED : ஆக 21, 2026 04:01 PM
மதுரை: மதுரையில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்க மாவட்ட கூட்டம் தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் நடந்தது. சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். தனசேகரப்பாண்டி வரவேற்றார். நாகலட்சுமி நிதிநிலை அறிக்கை வாசித்தார். அரசுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயகணேஷ், மாவட்ட பொருளாளர் சேகர், நிர்வாகிகள் சுமதி, பாண்டிப்பிரியா உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் பணிவரன்முறையை விரைவுபடுத்த வேண்டும், இப்பணியாளர்களுக்கு சீரடை நிர்ணயம் செய்ய வேண்டும், அதற்கான சீருடைப்படி, சலவைப்படி வழங்க வேண்டும், ஒவ்வொரு மாத இறுதியிலும் சம்பளம் வழங்க வேண்டும், அந்தந்த மாவட்ட அளவில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.