வண்டியூர் பூங்காவில் ஆய்வு
மதுரை : மதுரை வண்டியூர் சுந்தரம் பூங்காவில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் படகு சவாரி, சைக்ளிங், வாக்கிங் பாதை அமைத்தல், யோகா, தியான மையம், நுாலகம், கேன்டீன், குழந்தைகள், முதியோர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். கலெக்டர் பிரவீன் குமார் உடனிருந்தார். மேலும் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் ரூ.20 கோடி கூடுதல் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மையக் கட்டட பணியையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.