முன்பதிவு டிக்கெட் கவுன்டர் 2 அவசியம்
திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் திருச்சி, சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், குருவாயூர் பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கிருந்து பயணிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகம். இங்கு முன்பதிவு இல்லாத டிக்கெட் மற்றும் முன்பதிவு டிக்கெட் கொடுக்கும் இடம் என 2 கவுன்டர்கள் உள்ளன. முன் பதிவு டிக்கெட் கவுன்டரில் தட்கல் முன்பதிவு நேரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் தங்களது அவசரகால பயணங்களை தவறவிடும் சூழல் உருவாகுகிறது. எனவே கூடுதலாக ஒரு முன்பதிவு டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.