மேலும் செய்திகள்
நீதிமன்ற உத்தரவு மீறல் நடவடிக்கை கோரி வழக்கு
22-Oct-2024
மதுரை : மதுரையில் சி.எஸ்.ஐ.,யால் விற்கப்பட்ட அரசு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை புதுார் சம்பக்குளம் நல்லதம்பி தாக்கல் செய்த பொதுநல மனு:சமுதாயத்தில் நலிவுற்ற பெண்களுக்கு தொழிற்பயிற்சி மையம் அமைக்க சம்பக்குளத்தில் 31.10 ஏக்கர் நிலத்தை நிபந்தனைகளின் பேரில் 'அமெரிக்கன் மிஷன் போர்டு' பெயரில் 1912ல் தமிழக அரசு வழங்கியது. அரசிற்கு சொந்தமான அந்நிலத்தை சி.எஸ்.ஐ.,-சி.எஸ்.ஐ.டி.ஏ.,அமைப்பின் சில நிர்வாகிகள் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நில நிர்வாக கமிஷனர் விசாரித்தார். நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்க உத்தரவிட்டார். இதுவரை அகற்றவில்லை.நில நிர்வாக கமிஷனரின்உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டுவர அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை. சி.எஸ்.ஐ.,மற்றும் நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதவுவதுபோல் உள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சி.எஸ்.ஐ.,-சி.எஸ்.ஐ.டி.ஏ., நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு துணைபோகும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அந்நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: ஓய்வு பெற்ற நீதிபதியை ஈடுபடுத்த முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
22-Oct-2024