உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் வருவாய்த்துறை சங்கங்கள் ஒருங்கிணைப்பு; பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

மதுரையில் வருவாய்த்துறை சங்கங்கள் ஒருங்கிணைப்பு; பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

மதுரை : மதுரை மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இக்கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அலுவலர் சங்க செயலாளர் முகைதீன் அப்துல்காதர், கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ஜெயபாஸ்கர், முன்னேற்ற சங்க தலைவர் சுரேஷ், நிலஅளவை சங்க செயலாளர் ரகுபதி, கிராம ஊழியர் சங்க திருமங்கலம் தலைவர் பால்ச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் கோபி, துணைத் தலைவர் முருகானந்தம், இணை செயலாளர் மணிமேகலை, செயற்குழு உறுப்பினர்கள் ராம்குமார், செந்தில்வள்ளி பங்கேற்றனர்.வருவாய்த்துறையினர் பணிகளை மேற்கொள்ள கால அவகாசம், நிதிஒதுக்கீடு வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அனைத்து காலியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனத்தை 5 சதவீதம் என குறைத்ததை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.வருவாய் அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், அனைத்து பணியிடங்களிலும் தொகுப்பூதிய அடிப்படையை கைவிட்டு, நிரந்தர பணியிடமாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை