மேலும் செய்திகள்
தாலுகா அலுவலகத்தில் அலுவலர்கள் வெளிநடப்பு
19-Feb-2025
மதுரை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முடிவுகளின்படி அதிக பணிநெருக்கடியை களைந்திட வலியுறுத்தி பிப்.13 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விதிப்படி வேலை இயக்கம் நடந்து வருகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:45 வரை பணியாற்றிய பின் அலுவலர்கள் வெளியேறுகின்றனர்.இதையடுத்து நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து ஒரு மணி நேரம் முன்னதாக வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையில் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். செயலாளர் முகைதீன் விளக்கி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் முருகானந்தம், ராம்குமார், மணிமேகலை, முன்னாள் செயலாளர் அசோக்குமார் ஆகியோர், நலத்திட்டங்களை செயல்படுத்த குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்க வேண்டும், மூன்றாண்டுக்கு மேலான அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி பேசினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, பிறசங்க நிர்வாகிகள் முனியாண்டி, சிவகுருமன் உட்பட பலர் பங்கேற்றனர். வருவாய் அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ் பிரடெரிக் கிளமென்ட், இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
19-Feb-2025