உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொள்முதல் மையம் திறக்காததால் மழைக்கு முளைத்த நெல்மணிகள்

கொள்முதல் மையம் திறக்காததால் மழைக்கு முளைத்த நெல்மணிகள்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்காததால் நெல் குவியலை பாதுகாக்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்து வீணாகின்றன.இப்பகுதியில் தென்கரை கண்மாய் மற்றும் கால்வாய் பாசனத்தில் 500 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. காடுபட்டி ரோட்டில் நெல் கொள்முதல் மையம் செயல்படும் களத்தில் அறுவடை செய்த 250 ஏக்கர் நெல்லை குவித்து வைத்துஉள்ளனர். 20 நாட்களாக மையம் திறக்காத நிலையில் சமீபத்திய மழைக்கு நெல் குவியல் ஓரங்களில் முளைத்து விட்டன. தார்ப்பாய் போர்த்தி முடியும் உள்ளே ஈரப்பதம் அதிகரித்துள்ளது. நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்க துவங்கியுள்ளனர்.விவசாயி சேதுராமன்: ஏக்கருக்கு 40 மூடை வரும். ஆனால் கடந்தஆண்டு ஒன்றரை ஏக்கருக்கு 15ம், தற்போது 2 ஏக்கருக்கு 27 மூடை என மகசூல் பாதித்தது. மையம் திறக்காததால் தனியாருக்கு கிலோவிற்கு ரூ.4 குறைவாக விற்று விட்டோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை