சாலை மறியல்: 50 பேர் கைது
உசிலம்பட்டி; கருமாத்துார் புலித்தேவன்பட்டி ஊருணி பகுதியில் 2 ஏக்கர் 47 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டுத்தரும்படி ஒவ்வொரு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் மா.கம்யூ., கட்சி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். எந்த தீர்வும் கிடைக்காததால் கடந்த கூட்டத்தின் போது சாலை மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர்.அதன் படி நேற்று மதியம் தேனி ரோட்டில் மதியம் 12:00 மணி முதல் 12:10 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. 50 பேரை டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.