உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை கலெக்டர் கார் மீது ரவுடி மகன் கார் மோதல்

மதுரை கலெக்டர் கார் மீது ரவுடி மகன் கார் மோதல்

மதுரை:மதுரையில் கலெக்டர் சங்கீதா கார் மீது, எதிர்பாராதவிதமாக ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கார் லேசாக மோதியது. இதுதொடர்பாக, அவரது மகனிடம் விசாரணை நடத்தப்பட்டது.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலெக்டர் சங்கீதா நேற்று பங்கேற்று, மதியம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வந்தார். அப்போது சிக்னல் அருகே திரும்பிய போது, எதிரே வந்த 'பார்ச்சூனர்' கார் லேசாக மோதியது. இது தொடர்பாக, கலெக்டரின் கார் டிரைவருக்கும், பார்ச்சூனர் காரை ஓட்டி வந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கிருந்த போலீசார், கலெக்டர் காரை உடனடியாக அனுப்பி வைத்தனர். பார்ச்சூனர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது, ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மகன் நலந்த்குமார், 37, என்பது தெரிந்தது.காரை போலீசார் பறிமுதல் செய்து, நலந்த்குமாரிடம் விசாரித்தனர். இதற்கிடையே, கலெக்டரை சந்திக்க வரிச்சியூர் செல்வம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.ஆனால், ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் இருந்ததால், சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R.P.Anand
ஜன 11, 2025 10:47

அடேய் கலக்டருக்கு ஒட்டா இருக்கு நம்ம செல்வத்துக்கு நலாயரம் ஓட்டு இருக்கு. தலைமை அமைச்சர் இப்போ சொல்லு. அவரு நம்ம அனுதாபி ....


Mani . V
ஜன 10, 2025 05:28

ஏதே, ரௌடி மகன் கார் மீது கலெக்டர் கார் மோதலா? இதை சும்மா விடக்கூடாது.


நிக்கோல்தாம்சன்
ஜன 10, 2025 05:11

பாத்ரூமில் வழுக்கி விழச்செய்யலாமே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை