ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வலியுறுத்தல்
மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கராஜ், சார்லஸ், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள், துறையின் அமைச்சர் ஆனந்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியம் ஊராட்சித் தலைவர் அதிகாரத்தில் வழங்கப்படுகிறது. இதை மாற்றி பி.டி.ஓ.,க்களே வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் ஊதியத்தில் 50 சதவீதம், ஓய்வூதியம், பணிக்கொடையையும் பி.டி.ஓ., மூலமே வழங்க வேண்டும். குடிநீர் வினியோகிக்கும் மேல்நிலை தொட்டி இயக்குனர்களுக்கும், துாய்மைப் பணியாளருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி இயக்குனர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். ஒன்றிய, மாவட் ஊரக வளர்ச்சி அலுவலக கணினி இயக்குனர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மரணமடைந்தோர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.