உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காலாவதி பொருள் விற்பனை

காலாவதி பொருள் விற்பனை

பேரையூர்: பேரையூர், டி.கல்லுப்பட்டி, அத்திபட்டி சேடபட்டி பகுதிகளில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான பொருட்கள் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.உணவகங்கள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், போன்றவற்றில் கலப்பட உணவு பொருட்கள் அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை எந்த தடையுமின்றி நடந்து வருகிறது. விற்பனை ஆகாத உணவுகளை பிரிட்ஜ்களில் வைத்து விற்பது, பாஸ்ட்புட் கடைகளில் எந்த வித பாதுகாப்பும் சுகாதாரமும் இன்றி உணவு தயாரிப்பது போன்றவை மக்களுக்குதேவையற்ற உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளவற்றை அச்சிட வேண்டும். ஆனால் பெரும்பாலான உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் அச்சிடுவது இல்லை. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ