சாக்கடை நிரம்பி வழியும் சத்யாநகர்
மதுரை: மதுரை மேற்கு ஒன்றியம் கோவில்பாப்பாக்குடியில் சத்யா நகர் உள்ளது. சாக்கடைகளும், கழிவுநீரும் இங்குள்ள பிரதான பிரச்னையாக உள்ளது. மதுரையின் புறநகர் பகுதியில் சுகாதார சீர்கேடான பகுதியாக விளங்குகிறது. இந்தக் கிராமத்தில் உள்ளாட்சி நிர்வாகம் இருந்தவரையில் பணிகள் ஓரளவு நடந்தன. குப்பைகள் அப்புறப்படுத்தப்படுவதும், சாக்கடைகள் துார்ரவாரப்படுவதும் நிகழும். தற்போது ஊரக உள்ளாட்சி மன்றங்களின் காலம் முடிந்த பின் இதுபோன்ற பணிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.அகற்றப்படாத குப்பை, அடைப்பு நீக்காத கால்வாய் முழுவதும் கழிவுகள் சேர்ந்து கவலையை தருகின்றன. இதுபற்றி உள்ளாட்சி மன்றங்களில் தகவல் தெரிவித்தும் பயனில்லை.சிலநாட்களுக்கு முன் இங்கு வந்த அமைச்சர் மூர்த்தி, இப்பகுதியில் நடந்த முகாம்கள் என பலவகையிலும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.