மாணவர்களுக்கு உதவித்தொகை
வாடிப்பட்டி: கருப்பையா, சுப்புராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் பொன்னையா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன், சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். வருமானவரித்துறை முதன்மை கமிஷனர் ரவி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். முன்னாள் யூனியன் சேர்மன் வனிதா, ஓய்வூதியர் சங்க பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்பொறியாளர் நவராஜ் நன்றி கூறினார்.