உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்...

பள்ளி, கல்லுாரி செய்திகள்...

இலவச கண் பரிசோதனை மதுரை: கல்லுாரியில் நாட்டுநலப்பணித் திட்டம் அணிகள், ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் முதல்வர் சுரேஷ் தலைமையில் நடந்தது. சமூக சேவகர் அமுதன் பேசினார். பேராசிரியர், மாணவர்கள் என 400 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடந்தது. திட்ட அலுவலர்கள் ராபர்ட், கருப்பசாமி, பவித்ரா, ஹஸ்மத் பர்சானா, சுரேஷ்குமார், உமா மகேஸ்வரி ஏற்பாடு செய்தனர். கருத்தரங்கு மதுரை: தியாகராஜர் கல்லுாரியில் மகளிர் கற்கைக் குழு, தாவரவியல் துறை சார்பில் 'தொழில் முனைவோரை உருவாக்குவோம்' என்ற கருத்தரங்கு முதல்வர் பாண்டியாராஜா தலைமையில் நடந்தது. துறைத் தலைவர் மோகன் வரவேற்றார். அக்ரிசக்தி நிறுவனர் செல்வமுரளி தொழில்முனைவோராவது எவ்வாறு, அதற்கான உத்திகள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். கார்த்திகேயன், செல்வராக்கு, கார்த்திகா பங்கேற்றனர். மகளிர் கற்கை குழு இயக்குநர் அருணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை