உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம் மதுரை: கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தலைவர் தஸ்லீம்பானு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் உறுப்பினர் அருவகம் வரவேற்றார். போதை இல்லா தமிழகம், மாணவர் சேர்க்கை, கலைத்திருவிழா, தற்காப்பு கலை பயிற்சி, கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டடம், கழிப்பறை, குடிநீர், சுற்றுச்சுவர் பழுது பார்ப்பு, திறன் திட்டம் குறித்த கலந்துரையாடல் நடந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கருத்தாளர் சேதுராஜன், உறுப்பினர் சல்மா பங்கேற்றனர். கருத்தரங்கம் மதுரை: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியில் மின்னணுவியல், தொலைத்தொடர்பியல் சார்பாக கருத்தரங்கம் நடந்தது. தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பொருள் கட்டமைப்பு நிபுணர் ராஜ்குமார் கலந்துகொண்டார். முதல்வர் ராம்பிரசாத், துணைச்செயலாளர் பாலாஜி, துறைத்தலைவர் கஜலட்சுமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்துமதி, பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். பேராசிரியர்கள் ஜெயந்தி, மீனாட்சி, அங்கயற்கண்ணி ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாணவன் உதயமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை