| ADDED : பிப் 11, 2024 12:49 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தென்பழஞ்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் அன்புமொழி தலைமையில் நடந்தது. ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். ஊராட்சி தலைவர் வன்னிச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், விவசாய சங்கத் தலைவர் சிவராமன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மணிகண்டன் பரிசு வழங்கினர். ஆசிரியர் போஸ்ராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மேகலா, ராஜராஜேஸ்வரி, மாலதி, லதா செய்திருந்தனர்.* பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை ஈஸ்வரி வரவேற்றார். தலைமை ஆசிரியை விமலாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகன், பேரூராட்சி தலைவர் குருசாமி, துணைத்தலைவர் பிரியதர்ஷினி பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.