உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

மாணவி சாதனை

மதுரை: கல்வித்துறை சார்பில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ பள்ளி மாணவி ஹர்சினி தமிழ்ச்செல்வி தங்கப்பதக்கம் வென்றார். அவருக்குதாளாளர் லுாயிஸ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் திருத்துவராஜ் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் ஜெயபிரகாஷ், ஆசிரியர்கள். மாணவிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை: தமிழ்நாடு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் அமுதா, போலீஸ்உதவி கமிஷனர் செல்வின் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவிகள் பங்கேற்றனர். பின்னர் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் செல்வின், இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், தங்கமணி, பூர்ணகிருஷ்ணன், எஸ்.ஐ., கார்த்திகேயன் பேசினர். பேராசிரியர் மோகன்குமார், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சசிகலா பங்கேற்றனர். முதல்வர் அமுதா நன்றி கூறினார்.

பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உன்னத் பாரத் அபியான் குழு சார்பில் கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக வெள்ளரி, காளான் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது. செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். ஜான் லாரன்ஸ் பயிற்சி அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், விக்னேஸ்வரன் ஒருங்கிணைத்தனர்.

ஆண்டு விழா

மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். சேர்மன் மாதவன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் வீரமுருகன், உடற்கல்வி பேராசிரியர் வீரபாண்டி கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேர்மன் பரிசு வழங்கினார். செயல் அலுவலர்கள் முத்துமணி,பிரபாகரன், காந்திநாதன், கல்லுாரி முதல்வர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் வினோத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை