பஸ் வசதி இல்லாத பள்ளி மாணவர்கள்
பேரையூர்: பேரையூர் அருகே பாப்பையாபுரம், ராமநாதபுரம், எர்ரமரெட்டிபட்டி, சிலைமலைப்பட்டியில் காலை நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு மாணவர்கள் 6 கி.மீ நடந்து செல்லுகின்றனர்.மாலையில் வீட்டுக்கு வருவதற்கு மட்டும் பஸ் வசதி உள்ளது. காலையில் பள்ளி செல்வதற்கு வசதி இல்லை. விருதுநகரில் இருந்து பேரையூருக்கு சுப்புலாபுரம் வழியாக காலை 6:00 மற்றும் 10:00 மணிக்கு அரசு பஸ் வருகிறது. போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இதனாலேயே மாணவிகள் படிப்பை இடை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு காலையில் பள்ளி நேரத்தில் இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.