அறிவியல் ஆலோசனைக் குழு
மதுரை : மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் 16வது அறிவியல் ஆலோசனைக் குழுக்கூட்டம் நடந்தது. வேளாண்மை மற்றும் வணிகம் சார்ந்த கருத்துக் காட்சி மையத்தில் இடம் பெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை விரிவாக்கக் கல்வி இயக்குநர் முருகன் தலைமை வகித்தார். மதுரை வேளாண்மை கல்லுாரி, சமுதாய அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் மகேந்திரன், காஞ்சனா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் ஆறு புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பேராசிரியர் நிர்மலா நன்றி கூறினார். விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள் வழங்கப்பட்டன.