மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கு தண்டனை
09-Apr-2025
மதுரை : மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததால், நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மதுரை மகபூப்பாளையம் பாண்டியராஜன் 23, இவரது சகோதரர் ஜாக்கி (எ) பிரசாந்த் 22, பாண்டியராஜனின் மனைவி சரண்யா 20. இவர்கள் வில்லாபுரம் அருகே 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2024 ல் கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.நேற்று முன்தினம் 3 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.பாண்டியராஜன், ஜாக்கி நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். நீதிபதியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார் ஜாக்கி. இதனால் நீதிமன்றத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரிலுள்ள அந்நீதிபதியின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
09-Apr-2025