மாநில ஹாக்கி போட்டிக்கு தேர்வு
வாடிப்பட்டி: பள்ளி கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயது பிரிவில் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு பள்ளி மாணவர்கள், திருநகர் இந்திரா காந்தி நினைவு பள்ளியை 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். ராணிப்பேட்டையில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, செந்தில்குமாரை தலைமை ஆசிரியர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பஞ்சவர்ணம், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராமராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.