உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தன்னம்பிக்கையே வெற்றி தரும் ; நெல்லை பாலு

தன்னம்பிக்கையே வெற்றி தரும் ; நெல்லை பாலு

மதுரை: மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என மதுரையின் அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் நெல்லை பாலு பேசினார். மதுரை பாத்திமா கல்லூரியில், வரலாற்று துறை சார்பில், 'பாரம்பரியத்தின் தடங்கள்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் இருந்து 9 கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வரலாறு, கலாச்சாரத்தைப் பேணி காப்பது குறித்த கருத்துரு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.கல்லூரி முதல்வர் பாத்திமா மேரி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, கலாச்சாரங்களைக் காப்பது குறித்தும், எழுத்தாளர் மு.ஆதவன் உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான மதுரையின் பெருமைகள் குறித்தும் பேசினர்.மதுரையின் அட்சயப் பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் நெல்லை பாலு பல்வேறு போட்டியில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை லேடி டோக் கல்லூரிக்கு சிறப்பு கேடயம் வழங்கப்பட்டதுநெல்லை பாலு விழாவில் பேசியதாவது; மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முயற்சிதான் எப்போதும் முழு வெற்றியைத் தரும். ஒரு செயலைச் செய்யலாம் என முயற்சி செய்யும்போதே, பாதி வெற்றி பெற்று விடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல, பங்கேற்பது தான் முக்கியம். அதுதான் தன்னம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கைக்கு அது உதவிகரமாக இருக்கும்.ஆயக்குடி ராமகிருஷ்ணன்பணிக்குச் சென்ற காலத்தில் ஒரு விபத்தில் கழுத்துக்கு கீழே செயல்படாத ஆயக்குடி ராமகிருஷ்ணன் என்ற இளைஞர் தான், இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிற அமர்சேவா என்னும் அறக்கட்டளையை நிறுவி சிறந்த சமூக சேவகராக பணி செய்து வருகிறார். அவரைப் போன்றோரை மாணவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவர் அவர் பேசினார். கல்லூரி செயலாளர் இக்னேசியஸ் மேரி, துணை முதல்வர் அருள் மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வரலாற்றுத் துறைத் தலைவர் இவாஞ்சலின் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ