உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரை : மதுரை கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில் முனைவோர் அமைப்பு, தமிழ்நாடு தொழில்முனைவோர் புதுமை நிறுவனம் சார்பில் புதிய சாதனங்கள் செய்தல், தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். துணை முதல்வரும் தொழில் முனைவோர் அறிவுரையாளருமான சகாதேவன் தொழில் முனைவோருக்கான முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆசிரியர்கள் சாந்தி, சிவனேசன் தொழில் முனைவோர் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை