உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய கருத்தரங்கு

தேசிய கருத்தரங்கு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று துறை சார்பில் பண்டைய, இன்றைய, நாளைய வரலாற்றின் போக்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, துணைத் தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் உமா வரவேற்றார்.சென்னை பல்கலை வரலாற்று உயராய்வு மைய தலைவர் சுந்தரம் உட்பட 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நுால் வெளியிடப்பட்டது. கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ராஜகோபால், திருப்பதி ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பிரையா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ