கருத்தரங்கு
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் காட்சியியல் தொடர்புத்துறை, மதம், தத்துவம், சமூகவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது. ஜெர்மனி கோட்டிங்கென் பல்கலை ஆராய்ச்சி பட்டதாரிகள் எலெனா ரோமஷிகோ, அடோல்ப் குஸ்டாவ் வான்டெர் வால்ட் பங்கேற்றனர். ஊடகங்கள் ஊனமுற்ற நபர்களை எவ்வாறு சித்தரிக்கின்றன, அவை மத சூழல்களுடன் எவ்வாறு குறுக்கிடுகின்றன என்பதை 'ஊடகங்கள் மற்றும் மதத்தில் ஊனமுற்றோர் பிரதிநிதித்துவங்கள்' என்ற தலைப்பில் எலெனா ரோமஷிகோ விளக்கினார். மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில தேவைப்படும் அடிப்படை தகுதிகள், அதுகுறித்த சந்தேகங்களை தீர்த்து வைத்தார். நிகழ்ச்சியை துறைத் தலைவர்கள் சைலஜா, அருளப்பன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.