உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் நாளை சஷ்டி விழா துவக்கம்

குன்றத்தில் நாளை சஷ்டி விழா துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (நவ.2) துவங்குகிறது.காலை 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 8:45 மணிக்கு மேல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும்.

உழவாரப் பணிகள்

கந்த சஷ்டி திருவிழாவில் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். இதையடுத்து மண்டபங்கள், சஷ்டி மண்டபம், வள்ளி, தேவசேனா திருமண மண்டபங்கள், கோயில் வளாகத்தில் நேற்று உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. யாக சாலை பூஜை நடைபெறும் விசாக கொறடு மண்டபமும் புதுப்பிக்கப்பட்டது.கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தினமும் தினை மாவு, பால், வாழைப்பழம், எலுமிச்சம் பழச்சாறு ஆகியன உபயோதாரர்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும். தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க தினை மாவுடன், தேன், சர்க்கரை, சுக்கு, ஏலக்காய், நெய் கலந்து தயாரிக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை