உசிலம்பட்டியில் கடையடைப்பு
உசிலம்பட்டி: 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கவும், நீர்ப்பாசன கால்வாயாக அறிவிக்கவும், உசிலம்பட்டி வளர்ச்சிக்கு தடையாக உள்ள காப்புக்காடு பகுதி வனச்சட்டத்தை நீக்கவும், போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த உள்ளனர். இன்று ஆக. 12 ல், கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் விவசாய, அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் பங்கேற்கின்றனர்.