மேலும் செய்திகள்
விபத்தில் ஒருவர் பலி
06-Aug-2025
உசிலம்பட்டி,:உசிலம்பட்டி பகுதி நீராதார திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையில் இருந்து சோதனை அடிப்படையில் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆண்டு தோறும் தண்ணீர் திறக்கும் சூழலையும், இந்த திட்டத்தை நீர்ப்பாசன திட்டமாகவும் அறிவிக்க வேண்டும், உசிலம்பட்டி பகுதி வளர்ச்சியை தடுக்கும் வனச்சட்டம் காப்புக்காடுகள் பகுதி என்பதை ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கடையடைப்பு நடத்துவதாக வர்த்தக சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவான இப் போராட்டத்தில் உசிலம்பட்டி நகர், கிராம பகுதிகளில் அனைத்து கடைகளையும் நேற்று அடைத்தனர். வழக்கறிஞர் சங்கத்தினர் கோர்ட்டை புறக்கணித்து ஊர்வலமாக சென்றனர். தேவர் சிலை அருகே கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர், அரசியல் கட்சியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மதுரை ரோட்டில் இருந்து ஊர்வலமாக வந்து கால்வாயில் தண்ணீர் விட வலியுறுத்தி பேசினர்.
06-Aug-2025