உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலையை சொந்தம் கொண்டாடுவதா; பல்வேறு அமைப்புகள் ஆலோசனை

திருப்பரங்குன்றம் மலையை சொந்தம் கொண்டாடுவதா; பல்வேறு அமைப்புகள் ஆலோசனை

திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுப்பது சம்பந்தமான முருக பக்தர் பேரவை, ஹிந்து முன்னணி, ஹிந்து ஆதரவு அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்துக்குமார், துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் அரசு பாண்டி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் கலாநிதி மாறன், மாவட்ட தலைவர் குருஜி, செயலாளர் செல்வகுமார் கலந்து கொண்டனர்.முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சிலர் சொந்தம் கொண்டாடி சட்டம் ஒழுங்கை சீரழித்து வருகின்றனர். அவர்கள் மீது தமிழக போலீசார் தகுந்த சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நடவடிக்கை எடுக்காவிட்டால் பக்தர்களை திரட்டி ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை